Saturday, 10 November 2012
Friday, 12 October 2012
காற்றில் கரைந்து போகும் மனிதர்கள் அதிர்ச்சி தகவல்

பார்வைக்கு எட்டிய தூரம் வரை கடல்போல் காணப்படும் ஏரி,அங்காங்கே உயந்து நிற்கும் மலைகள், பசுமையாக காட்சியளிக்கும் குட்டித் தீவுகள் என சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கும் சுவராஸ்யங்கள் ஏராளம் இருந்தாலும் என்வெட்டினெட் வெறிச்சோடி கிடக்கிறது. ஏன்? அந்த தீவுக்கு செல்லும் மனிதர்கள் திடீரென்று காற்றில் கரைந்து மாயமாகிவிடுகிறார்கள் என்கிற விஷயம் திகிலூட்டுவதாக உள்ளது.
உலகில் மிகப்பெரிய பாலைவனக்கடல் என்று பெயர் பெற்ற துர்கானா ஏரி கென்யா நாட்டில் உள்ளது. ருடால்ப் ஏரி என்று ஒருகாலத்தில்
அழைக்கப்பட்ட இந்த ஏரிக்கு பல்வேறு நதிகளிலிருந்து தண்ணீர் வருகிறது. இங்கு நிலவும் கடுமையான வெப்பத்தால் ஒரு பகுதி தண்ணீர் ஆவியாகிவிடுகிறது. இதில் மிச்சிடும் நீர் அதிக உப்புத்தன்மையுடன் கடினமாக காணப்படுகிறது. கென்ய நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்திடும் இடங்களில் ஒன்றாக இந்த பாலைவனக்கடல் திகழ்கிறது.
இங்கே குட்டி,குட்டி தீவுகளும் பழமை மாறாத பழங்குடியின் மக்களின் வாழ்க்கை முறையும் சுற்றுலாபயணிகளை மேலும் கவர்ந்திழுக்கின்ற நிலையில் ரத்தத்தை உறையவைக்கும் அதிர்ச்சிகளும் உள்ளது. இங்குள்ள குட்டி தீவுகளில் ஒன்றுதான் என்வெட்டினெட் தீவாகும். இங்கே வாழும் பழங்குடி இன மக்களின் பேச்சு வழக்கப்படி ''என்வெட்டினெட்'' என்பதற்கு ''திரும்பிவராது'' என்று அர்த்தமாம்.அதன்படி இந்த தீவுக்கு செல்பவர்கள் யாரும் திரும்பி வந்ததே கிடையாதாம், அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு சவால்விடும் வகையில் இந்த தீவில் நடக்கும் சம்பவங்கள் உள்ளன.
முன்னொரு காலத்தில் இந்த தீவில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தனர்.என்றும் மீன் பிடிப்பது , வேட்டையாடுவது அவர்களின் தொழிலாக இருந்தது. என பக்கத்து தீவுவாசிகள் சொல்கின்றனர். ஆரம்பத்தில் வியாபாரத்திற்காக பக்கத்து தீவுகளுக்கு மக்கள் வெளியேறி வந்துள்ளனர். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தீவிலிருந்து வெளியே வரும் மக்கள் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்துள்ளனர்.

ஒரு கட்டத்திற்கு பிறகு யாரும் வெளியே வராமல் போனதால் பக்கத்து தீவுகளில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து என்வெட்டினெட் தீவுக்கு சென்றுள்ளனர், ஆனால் அப்படி தேடி சென்றவர்களும் திரும்பாமல் பேகவே உச்சக்கட்ட மர்மத்தீவாக என்வென்டினெட் தீவு மாறிபோய்விட்டது.
இதே போன்று திடீரென வானத்திலிருந்து சூறாவளி போல் வால்வைத்து சுழல் காற்று அடிக்கடி என்வென்டினெட் தீவில் தரையிரங்கும் என்றும் அப்போது தீவில் உள்ள சுற்றுலாபயணிகள் அங்குள்ள பொருட்களை விண்வெளிக்கு உறிஞ்சி இழுத்து செல்லப்படுகிறார்கள் என்று மற்றொரு அதிர்ச்சி தகவலும் சொல்லப்படுகிறது. இது குறித்து பல ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்ட ஆராய்ச்சியாளர் விவியன் பஸ்சுகக்கு, என்வெட்டினெட் தீவில் பிரமாண்டமான ஒளிவெள்ளம் எவ்வாறு வருகிறது, வானத்திலிருந்து வால்வைத்த சூறாவளி காற்று எப்படி வருகிறது அது எப்படி மனிதர்களை மாயமாக்குகிறது என்ற கேள்விகளுக்கு கடைசிவரை அவரால் விடைகான முடியவில்லை.
எந்தவித தடயமும் இன்றி எலும்புகள் கூட மிஞ்சிவிடாது மனிதர்களை காற்றில் கரையவைத்து மாயமாக்கிடும் என்வென்டினெட் தீவுக்கும் வேற்று கிரகவாசிகளுக்கு தொடர்பு உள்வதா என்ற கோணத்தில் தற்போது ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.இங்குள்ள மக்களை வேற்றுகிரகவாசிகள் பறக்கும் தட்டுகளில் ஒளிவெள்ளத்தோடு வந்திரங்கி கடத்தி செல்கிறார்கள் என்றும் கண்ணுக்கு தெரியாத சக்கரம் புயல்வேகத்தில் காற்றில் சுழன்று மக்களை காற்றில் கரைய வைக்கிறது என்றும் தற்போது தகவல்கள் வெவியாகிபடி உள்ளது.
கடந்த 1935 ம் ஆண்டு ஆங்கிலேய ஆராய்ச்சியாளர் விவியன்பஸ் என்பவர் தனது குழுவின்ரரோடு இந்த மர்மத்தீவு குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார். முதல் கட்டமாக தனது இளம் விஞ்ஞானிகள் மார்ட்டின்சாப்லிஸ், பில்டாசன் ஆகியோரை விவியன்பஸ் அனுப்பியுள்ளார். நாட்கள் தான் போனதே தவிர இளம் விஞ்ஞானிகள் தீவை விட்டு வெளியே வரவில்லை.இதனால் அதிர்ந்து போன ஆராய்ச்சியாளர்கள் தூரத்தில் இருந்தபடியும் ஹெலிகாப்டர்களில் பறந்து தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போதும் எந்த தடயமும் கிடைக்கவில்லை,பழங்குடியின மக்களின் குடிசைகளும் அழுகிய மீன்களும்,சிதறிக்கிடந்த நிலையில் மனிதர்களின் நடமாட்டமின்றி தீவு முழுவதும் சூன்யமாக காட்சியளித்துள்ளது.
இதை தொடர்ந்து பக்கத்து தீவுகளில் வசித்து வரும் பழங்குடியின மக்களிடம் ஆராய்ச்சியாளர் விவியன்பஸ் மர்த்தீவின் தன்மைகள் குறித்து தகவல்கலை சேகரித்தார். அப்போது என்வென்டினெட் தீவில் திடீரென பிரமாண்ட ஒளிவெள்ளம் வரும் .அப்போது அந்த இடத்தில் யார் இருந்தாலும் காற்றில் கரைந்து காணாமல் போய்விடுவார்கள். இந்த ஒளிவெள்ளத்தின் காரணமாகத்தான் தீவில் இருந்த பழங்குடி இன மக்கள் ,சுற்றுலா பயணிகளும் காணாமல் போயிருக்கலாம் என்று பக்கத்துதீவு வாசிகள் அதிச்சியுடன் குறியுள்ளனர்.
ஆனால் அறிவியல் வளர்ச்சி மிகுந்த 21ம் நூற்றாண்டில் விடைகாணமுடியாத பல்வேறு மர்மங்களுக்கு விடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளநிலையில் என்வென்டினெட் தீவின் மர்மமுடிச்சுகள் மட்டும் இதுவரை அவிழாமல் உள்ளது. அதுவரை என்வென்டினெட் தீவில் காற்றில் மனிதர்கள் கரையும் மனிதர்கள் கரையும் நிகழ்வுக்கு தொடர் சர்ச்சையை ஏற்படுத்தி கொணடே இருக்கும்
உயிரோடு விளையாடும் மருத்துவர்கள்! அதிர்ச்சி தகவல்கள்!
உயிரோடு விளையாடும் மருத்துவர்கள்! அதிர்ச்சி தகவல்கள்!
விளையாட்டு இது நம்மோடு ஊறிப் போன விசயம்! ஆனால் எது
விளையாடுவது? கிரிக்கெட் விளையாடலாம்! புட்பால் விளையாடலாம்! ஹாக்கி! ஏன்? கில்லி
கோலி என்று எது வேண்டுமானாலும் விளையாடுங்கள் ஆனால் உயிரோடு விளையாடுவார்களா?
ஆனால் இந்த ஆபத்தான விளையாட்டு தமிழ் நாட்டில்தான் நடக்கிறது!
ஆம்
தமிழ்நாட்டில்தான் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் சித்த மருத்துவர்கள்!
தமிழ்நாட்டில் சுமார் 2000 சித்த மருத்துவர்கள் இருப்பதாக இன்றைய காலை செய்தி தாள்
பகிர் தகவல் தந்துள்ளது.
தமிழ்
நாட்டில் எது இருக்கிறதோ இல்லையோ நோய்களுக்கு பஞ்சம் இல்லை! தினமும் புதிது
புதிதாக நோய்கள் தோன்றி மக்களை அச்சுறுத்தும் அதே வேளையில் இந்த போலி டாக்டர்கள்
வேறு புதிதாக கிளம்பி தொலைத்து விட்டார்கள் இவர்கள் விளையாடுவது அப்பாவிகளின்
உயிரோடு என்பதை தமிழக அரசு கவனத்தில்
கொள்ளவேண்டும்! எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நினைப்பில் இருக்கும் தமிழன்
தன்னுடைய வியாதி குணமாக மருந்து கடைகள் முதல் இந்த மாதிரி சாமியார்கள் வரை
மொய்க்கிறான்.
இப்படி
விழிப்புணர்வு இல்லாமல் வரும் மக்களை வசியப்படுத்தி இழுப்பதே இந்த மருத்துவர்களின்
வேலை!. தமிழகத்தின் பெரும் பண முதலைகள் எல்லாம் எதில் சம்பாதிக்கலாம் என்று
கோடிகளை மருத்துவத்துறையில் கொட்டி மருத்துவக் கல்லூரிகளையும் மருத்துவ மனைகளையும்
கட்டி கோடிகளை குவித்து வரும் வேளையில் இவர்கள் சில இலைகளையும் தழைகளையும்
தைலங்களையும் வைத்துக் கொண்டு வீதிக்கு வீதி கல்லாக் கட்டிக் கொண்டு
இருக்கிறார்கள்.
இவர்களை
அணுகுவது எளிது! அப்பாயிண்ட்மெண்ட் வாங்க வேண்டிய அவசியம் இல்லை! கட்டணமும் குறைவு
இருபது முதல் 50 ரூபாய்தான் கட்டணம் என்பதெல்லாம் மக்களை இவர்கள் முன் இழுத்து
வருகின்றன. எல்லாம் ஓக்கேதான்! ஆனால் இவர்கள் தரும் மருந்து சரியானதா? இவர்கள்
முறையாக படித்து சித்த மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்றவர்களா? என்று
பார்த்தால் அங்கேதான் முளைக்கிறது பிரச்சனை!
தமிழ்
நாட்டில் மருத்துவம் பார்க்கும் சித்த மருத்துவர்களின் சான்றிதழ்கள் பெரும்பாலும்
போலியானவை என்று இம்ப் காப்ஸ் மற்றும் மாநில சித்தமருத்துவ கவுன்சில் கூறுகிறது.
இது குறித்து தினமலர் வெளியிட்ட செய்தி லிங்க்:
இப்படியே போனால் தமிழகத்தில் நோயாளிகள்
அதிகரிப்பார்களே தவிர குறைய மாட்டார்கள்முன்பு போலி டாக்டர்களை களையெடுத்த மாதிரி
இப்போது போலி சித்த மருத்துவர்களை களையெடுக்க வேண்டிய தருணம் வந்து விட்டது.
தூங்கி கொண்டிருக்கும் தமிழர்களும் தமிழக அரசும் விழிக்க வேண்டிய தருணம் இதுவே!
Wednesday, 8 August 2012
செவ்வாய் கிரகம் அழிந்தது அணு ஆயுத யுத்தத்தாலா ? பிரமிப்பூட்டும் தகவல்கள் !! |
நம்புவதற்கே சற்று கடினமாக இருக்கும். ஆனால், உண்மையிலேயே வியக்க வைக்கும் தகவல்கள் கொண்டது இந்த கட்டுரை.
இதிலே கூறப்பட்டு இருக்கும் தகவல்கள்
உண்மையாக இருக்கும் பட்சத்தில், வெகு வேகமாக நமது பூமியும், செவ்வாய்க்
கிரகம் போலே ஆகிவிடும் போல் தெரிகிறது. படித்துப் பாருங்கள். ஒரு இரண்டு
வருடம் முன்பே , இணையத்தில் வெளியாகி உள்ள கட்டுரை இது. சமீபத்தில் பார்க்க
நேர்ந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
யார் இந்த போரிஸ்கா?
ரஷ்யாவில், சைரினொவிஸ்க் என்னும் நகரத்தில் ஜனவரி 11, 1996ல் பிறந்தவன் போரிஸ் கிப்ரியானோவிச், சுருக்கமாக போரிஸ்கா. மேலே கேட்கப்பட்ட அத்தனை கேள்விக்குறிகளையும் ஆச்சரியக்குறிகளாக மாற்றியவன். தற்போது 16 வயதாகிறது இந்தச் சிறுவனுக்கு.
இவனது அசாத்தியமான ஆற்றல்களைக் கண்டு கவலைப்படுகின்றனர் பெற்றோர். புதிரான சில வழிகளின் மூலம் அவனுக்குள் தகவல்கள் ஊட்டப்படுவதாக எண்ணுகின்றனர். இரண்டு வயதிலேயே கிண்டர் கார்டனில் சேர்க்கப்பட்ட போரிஸ்காவின் மொழியாற்றல், நினைவுத் திறன், சுட்டித்தனம் போன்றவை அசாதாரணமாய் இருந்ததாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். யாரும் அவனுக்கு சொல்லிக் கொடுக்காமலே ‘தானாக’ பல திறமைகள் அவனுக்கு வந்ததாகக் கூறுகின்றனர்.
சில நேரங்களில், சம்மணமிட்டு அமர்ந்து செவ்வாய் கிரகம், அங்கு நிலவிய வாழ்க்கை முறை, இதர கிரக அமைப்புகள் போன்றவற்றைப் பற்றி விவரிக்கிறானாம் போரிஸ் தான் செவ்வாய் கிரகத்திலிருந்து பிறப்பெடுத்து இங்கு வந்ததாகவும், இன்றும் செவ்வாய் கிரகத்தில் மக்கள் வசிப்பதாகவும், ஆனால் பயங்கரமான பேரழிவினால் தற்போது நிலத்தின் அடிப்பரப்பில் வாழ்ந்து வருவதாகவும் கூறுகிறான். மேலும், செவ்வாய் கிரக வாசியாக இருந்தபோது, பூமிக்கு ஆராய்ச்சிக்காக வந்து சென்றதாகவும் கூறுகிறான்.
லெமூரியக் கண்டத்தின் ஆய்வுப் புத்தகம் ஒன்றை அவனது தாய் அவனுக்குக் கொடுத்தபோது, ஆச்சரியத்துடன் பார்த்த போரிஸ், லெமூரியா கண்டத்தின் அழிவு பற்றி பரபரப்பாக விவரிக்க ஆரம்பித்தான். இதெல்லாம் எப்படித் தெரியும் என்று கேட்டால், எல்லாம் நினைவில் இருக்கிறது என்று பதிலளிக்கிறான்.
பெரிய பிரமிடுகளைப் பற்றிப் பேசும் போரிஸ், மனிதத் தலை, சிங்க உடம்பாக காட்சியளிக்கும் Sphinx பிரமிடுக்குள் மனித வாழ்க்கையின் ரகசியங்கள் இருக்கின்றன என்றும், அதைத் திறப்பதற்கான வழி அதன் காதுப் பகுதியில் உள்ளதுபோலத் தெரிவதாகவும் விவரிக்கிறான்.
போரிஸ்காவைப் போன்ற குழந்தைகள் பிறப்பது சமீப காலத்தில் சாத்தியமாகியுள்ளது என்றும் பொதுவாக 1980க்குப் பின்னர் பிறந்த குழந்தைகளில் சிலருக்கு இது போன்ற இயற்கையின் கொடை கிடைத்திருக்கிறது என்றும் ஒரு சாரார் கூறுகின்றனர். இத்தகைய தன்மையுடையோரை ‘இண்டிகா குழந்தைகள்’ என்றும் அழைக்கின்றனர்.
செவ்வாயில் ஏற்பட்ட பேரழிவிற்கு அணு ஆயுதப் போரே காரணமென்றும், கதிரியக்கங்களின் வீரியம் காரணமாக, தப்பிப் பிழைத்தவர்கள் வெளியே வரமுடியவில்லை என்றும் பாதுகாப்பான கவச அறைகளில் அவர்கள் பாதாளத்தில் வாழ்வதாகவும் கூறும் போரிஸ், அவர்கள் கார்பன்-டை-ஆக்ஸைடை சுவாசித்து வாழ்பவர்கள் என்றும் கூறுகிறான்.
பூமியைப் பொறுத்த வரை ஆக்ஸிஜனை மட்டுமே சுவாசிக்க முடியும் என்றும், ஆனால் இந்த பிராணவாயு மனிதர்களின் வாழ்நாளைக் குறைப்பதாகவும் சொல்கிறான்.
விண்வெளியைப் பற்றி சகலமும் தெரிந்து வைத்திருக்கும் போரிஸ் UFOக்களைப் பற்றியும் நிறைய பேசுகிறான். செவ்வாயில் இருக்கும்போது ஸ்பேஸ்கிராஃப்டை இயக்கும் பயிற்சி பெற்றிருந்ததாகவும் கூறுகிறான்.
இவனை வியப்புடன் நோக்கும் விஞ்ஞான உலகம், விஞ்ஞான பேராசிரியர்களே சரளமாக உரையாடுவதில் உள்ள சிக்கல்கள் இவனுக்கு இல்லை எனத் தெரிவிக்கிறது.
போரிஸ்காவைப் பொறுத்தவரை “கள்ளங்கபடமில்லாத அன்பும், எதையும் மன்னிக்கும் தயாள குணமுமே மக்களின் சந்தோஷமான வாழ்க்கைக்கு வழி என்றும், இதைத் தாண்டிய எந்தவொரு விஷயமும் மனித குல அழிவிற்கு வழிவகுக்கும்” என்கிறான்.
போரிஸ்காவின் கூற்றுகளின் படி, நாம் வாழும் இப்பூமி தன்னைப் புதுப்பித்துக் கொள்ள ஆயத்தமாகி வருவது போலத் தெரிகிறது.
Subscribe to:
Posts (Atom)